உளுந்தூர்பேட்டை அருகேமோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் செஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் வேலாயுதம் (வயது 41). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தபோது தனது மனைவி ஜெயாவுடன் மாரனோடை சாலையில் குடை பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கணவன்-மனைவி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேலாயுதம் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஜெயா உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.