மேச்சேரி:-
மேச்சேரி அர்சுணாதெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 54). விவசாயி. இவர், நேற்று மாலை மேட்டூர்- மேச்சேரி சாலையில் மொபட்டில் சென்றார். தனியார் வங்கி அருகில் சென்ற போது, பின்னால் மேட்டூரில் இருந்து வந்த தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.