மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-04-19 00:15 IST

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 54) விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் இருளங்குப்பம் -பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆரோக்கியதாஸ் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்