கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்திரை (வயது 48). இவர் மைக் செட் கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் மணகெதி கிராமத்திற்கு நேற்று இரவு 7 மணியளவில் சின்னத்திரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையார்பாளையம் புது பஸ் நிலையம் அருகே ஒருவர் வழியைமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சின்னத்திரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.