மதுரை வழியாக இயக்கப்படும் மும்பை-தூத்துக்குடி சிறப்புக்கட்டண ரெயில் சேவை நீட்டிப்பு
மதுரை வழியாக இயக்கப்படும் மும்பை-தூத்துக்குடி சிறப்புக்கட்டண ரெயில் சேவை இந்த மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மதுரை வழியாக இயக்கப்படும் மும்பை-தூத்துக்குடி சிறப்புக்கட்டண ரெயில் சேவை இந்த மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் சேவை நீட்டிப்பு
மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மும்பையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு 2 சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில்கள் கடந்த மாதம் இயக்கப்பட்டன. இதற்கிடையே, இந்த ரெயில்களின் சேவை இந்த மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.01143) மும்பையில் இருந்து வருகிற 7-ந் தேதி, 14,21 மற்றும் 28-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மும்பையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு நாளை இரவு 7.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 11 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.01144) தூத்துக்குடியில் இருந்து வருகிற 9-ந் தேதி, 16,23 மற்றும் 30-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் மாலை 3.40 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் சென்றடைகிறது.
நிற்கும் இடங்கள்
ரெயில், தாதர், கல்யாண், லோனேவாலா, பூனே, தவுந்த், சோலாபூர், கல்புர்கி, வாடி, ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 3 பொதுப்பெட்டிகளும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். இதில் வழக்கமான ரெயில் கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் அதிகமாக இருக்கும்.