நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்-கலெக்டர் அம்ரித் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-08-16 19:30 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்வது

தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்களுடன் முதற்கட்ட கலந்தாலோசனை கூட்டம், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைத்தார். இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அன்று முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

290 பள்ளிகளில் காலை உணவு திட்டம்

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் வருகிற 25-ந் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி, குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 187 ஊராட்சி மற்றும் 80 பேரூராட்சி என மொத்தம் 290 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

எனவே, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முன்கூட்டியே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கட்டட வசதிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவித்துள்ள கால அட்டவணையின் படி மாணவ, மாணவிகளுக்கு உணவு சமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்