முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகளை கண்டிப்பது. இந்திய ராணுவத்தை அவதூறாக பேசிய சாட்டை சரவணனை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி ராணுவ வீரர் பிரபுவை படுகொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கயத்தாரில் முன்னாள் ராணுவ வீரர் சுப்புராஜை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முப்படை ராணுவ வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.