யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள்
சின்னசேலத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.;
சின்னசேலம்,
பெத்தானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சின்னசேலம் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமை தாங்கி யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோப்பு, துண்டு, பேஷன் டப்பா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.பெத்தானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார். இதில் வட்டார சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் மாயக்கண்ணன், கவுதம், சீனிவாசன், அசலாம்பாள், ஜெகதீசன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் கச்சிராயப்பாளையம், நைனார்பாளையம், மேல்நாரியப்பனூர், தொட்டியம், அமகளத்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மருத்துவ அலுவலர்கள் ஆர்த்தீஸ்வரன், தாமோதரன், கோகுல், சரண்யா, ஷாஜித் அலி ஆகியோர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்களை வழங்கினர்.