எலக்ட்ரீசியன் பலி
கோவிந்தபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் எலக்ட்ரீசியன் பலியானார்.
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது60). எலக்ட்ரீசியன். நேற்று காலை இவர் கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுபற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.