ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய என்ஜினீயர் பலி

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய என்ஜினீயர் பலியானார்.

Update: 2023-09-07 18:45 GMT

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய என்ஜினீயர் பலியானார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

ராஜாக்கமங்கலம் அருகே எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 55). இவர் ராஜாக்கமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி காலையில் தனது பிள்ளைகளை கோணம் பகுதியில் உள்ள பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்ப வந்த சிவகுமார் மோட்டார் சைக்கிளை தம்மத்துக்கோணம் பகுதியில் நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக சாலையின் குறுக்கே நடந்து சென்றார். அப்போது எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்த குபேரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சிவகுமார் மீது மோதியது.

மின்வாரிய என்ஜினீயர் சாவு

இதில் சிவகுமார் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய என்ஜினீயர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்