கல்வி மாவட்டம் வாரியாக முடிவுகள் வெளியானது

பிளஸ்-1 பொதுத்தேர்வில் கல்வி மாவட்டம் வாரியாக முடிவுகள் வெளியானது.

Update: 2022-06-27 19:06 GMT

பிளஸ்-1 பொதுத்தேர்வில் கல்வி மாவட்டம் வாரியாக முடிவுகள் வெளியானது.

விருதுநகர் மாவட்டம்

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 11,173 மாணவர்களும், 12,184 மாணவிகளும் ஆக மொத்தம் 23,357 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,340 மாணவர்களும், 11,952 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். ஆக 22,292 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.44ஆகும்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 92.54. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.1. ஆகும். இதில் விருதுநகர் மாவட்டம் 95.44 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்விலும் இம்மாவட்டம் மாநில அளவில் 2-வது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1பொதுத்தேர்வில் 3,185 மாணவர்களும், 3,496 மாணவிகளும் ஆக மொத்தம் 6,681 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 2,982 மாணவர்களும், 3,447 மாணவிகளும் ஆக மொத்தம் 6,429 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.23 ஆகும்.

சிவகாசி கல்வி மாவட்டத்தில் 3,024 மாணவர்களும், 3,509 மாணவிகளும் ஆக மொத்தம் 6,533 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 2,813 மாணவர்களும், 3,444 மாணவிகளும் ஆக மொத்தம் 6,257 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.78 ஆகும்.

அருப்புக்கோட்டை

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 2,665 மாணவர்களும், 2,963மாணவிகளும் ஆக மொத்தம் 5,628 மாணவ -மாணவிகள்தேர்வு எழுதிய நிலையில் 2,430 மாணவர்களும், 2,899 மாணவிகளும் ஆக மொத்தம் 5,329 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.69.

அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 2,299 மாணவர்களும், 2,216 மாணவிகளும் ஆக மொத்தம் 4,515 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 2,115 மாணவர்களும், 2,162 மாணவிகளும் ஆக மொத்தம் 4,277 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் தேர்ச்சி சதவீதம் 94..73 ஆகும். தேர்ச்சி சதவீதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்