"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்

Update:2023-03-20 09:54 IST
Live Updates - Page 5
2023-03-20 05:46 GMT

ஒரே துறையின் கீழ் பள்ளிகள்

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்

2023-03-20 05:44 GMT

பன்னாட்டு பறவைகள் மையம்

மரக்காணத்தில் 25 கோடி ரூபாயில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்

2023-03-20 05:41 GMT

வெள்ள தடுப்பு பணி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகள் 434 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2023-03-20 05:38 GMT

பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சித்தா மருத்துவக்கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2023-03-20 05:32 GMT

மகளிர் சுய உதவி குழுக்கள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-03-20 05:31 GMT

புதுமைப்பெண் திட்டம்

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்

2023-03-20 05:30 GMT

ரூ.100 கோடியில் ஆதி திராவிடர் நல விடுதி

திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும்

2023-03-20 05:28 GMT

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா

அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்

2023-03-20 05:26 GMT

கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை

சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்

2023-03-20 05:24 GMT

புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு

Tags:    

மேலும் செய்திகள்