பந்தலூரில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறையினர் விசாரணை

பந்தலூரில் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.;

Update:2025-01-12 18:53 IST

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக தேவாலா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்பையா தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது மிகவும் அழுகிய நிலையில் சிறுத்தை பிணம் கிடந்தது. பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுத்தையின் உடல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சிறுத்தை இறந்து பல நாட்கள் இருக்கலாம். அதனால்தான் உடல் மிகவும் அழுகிவிட்டது. அது எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு மேலும் விவரங்கள் தெரியவரும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்