துர்கா சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
துர்கா சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் உள்ள துர்கா பூஜா கமிட்டி மற்றும் பெங்கால் சமாஜ் சார்பில் 38-வது ஆண்டு துர்கா பூஜை விழா 24-ந்் தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி புதிதாக வைக்கப்பட்டுள்ள துர்க்கை, விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் நேற்று தாரை தப்பட்டைகள் முழங்க வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேங்கூர் பூசை துறையில் உள்ள காவிரி ஆற்றில் துர்க்கை, விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த விழாவில் துர்கா பூஜா கமிட்டி மற்றும்் பெங்கால் சமாஜ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.