தொடர் கனமழை காரணமாக கோவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, 34 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-11-09 01:14 GMT

கோப்புப்படம்

கோவை,

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (09-11-.2023) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, 34 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கோவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

முன்னதாக கனமழை எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்