திண்டிவனம் அருகேகாரில் சாராயம் கடத்திய டிரைவர் கைது

திண்டிவனம் அருகே காரில் சாராயம் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-05-12 18:45 GMT


திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த கார் ஒன்றை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தலா 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 பாலித்தீன் பைகள் மற்றும் தலா 300 பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கவிநிலவன் (வயது 27) என்பதும், புதுச்சேரியில் இருந்து காரில் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சாராயம் கடத்தி வந்த கவிநிலவன் கைது செய்யப்பட்டு, திண்டிவனம் மதுவிலக்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள சாராயம், கார் பறிமுதல் செய்யப்பட்டு, மதுவிலக்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்