டாக்டர், நர்சு இடமாற்றம்; விளக்கம் அளிக்கவும் உத்தரவு

பிரசவத்தில் தாய்-குழந்தை சாவு காரணமாக டாக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2022-12-20 20:00 GMT

வத்திராயிருப்பு, 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரங்கநாயகி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை இறந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அரங்கநாயகியும் இறந்தார்.

இதையடுத்து அரங்கநாயகியின் தந்தை ஆசீர்வாதம், வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பணியில் இல்லாததும், நர்சின் கவனக்குறைவும்தான், பிரசவத்தின்போது தாய்-குழந்தை இறப்புக்கு காரணம் என கலெக்டரிடம் புகார் அளித்தார். இந்தநிலையில், அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தேவிகாவை எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், நர்சு உமாமகேசுவரியை தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து, சிவகாசி சுகாதார துணை இயக்குனர் கலு சிவலிங்கம் உத்தரவிட்டார். மேலும் டாக்டர் மற்றும் நர்சு மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து விளக்கம் அளிக்க இருவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்