சமூக நீதிக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை - ஜெயக்குமார் பேட்டி
திமுகவினர் மட்டுமே மாமன்னன் திரைப்படத்தை பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் மாமன்னன் திரைப்படம் குறித்து கூறியதாவது:
திமுகவினர் மட்டுமே மாமன்னன் திரைப்படத்தை பார்க்கின்றனர். மக்கள் யாரும் பார்ப்பதில்லை.சமூக நீதிக்கு தகுதி திமுகவிற்கு இருக்கிறதா ? .
ஆதிதிராவிடருக்கு முழுமையான அளவு கட்சியிலும் , ஆட்சியிலும் அதி முக்கியத்துவம் கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான்.
பொது தொகுதியில் ஆதிதிராவிடரை மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நிற்க வைச்சாங்க . திமுக நிற்க வைத்தார்களா ? . சமூக நீதியை ஜெயலலிதா தான் நிலை நிலைநாட்டினார்கள்.
சமூக நீதி திராவிட மாடல் , நாங்க தான் எல்லாத்துக்கும் சொந்தம் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். என தெரிவித்தார்.