பயன்பாட்டிற்கு வராத குடிநீர் வழங்கும் மையம்
குடிநீர் வழங்கும் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
விருதுநகர் அருகே அய்யனார் நகரில் பாவாலி பஞ்சாயத்து நிர்வாகத்தால் மாநில நிதி குழு ஒதுக்கீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தற்போது இந்த மையத்தை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. எனவே பாவாலி பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக இந்த குடிநீர் வழங்கும் மையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.