மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி

மஞ்சக்குடியில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி

Update: 2023-03-01 18:45 GMT


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் திருவாரூர் நேரு யுவ கேந்திரா மற்றும் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தது. செல்வராசு எம்.பி. கலந்து கொண்டு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கலெக்டர் சாருஸ்ரீ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் எம்.திருநீலகண்டன் வரவேற்று பேசினார். சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் எம். ஜி.சீனிவாசன் ஜி20 விழிப்புணர்வு விழாவுக்கு தலைமை தாங்கினார். திருவாரூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கவுரவ செயலாளர் வரதராஜன், கல்லூரி துணை முதல்வர் செந்தில், என். எஸ். எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் சிங்காரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு ,மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி, கல்லூரி முதல்வர் ஹேமா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மனித வள தொழில் முனைவோர் பயிற்சியாளர் மணிகண்டன் ஜி20 தலைவர் பதவியின் முக்கியத்துவம் குறித்தும், கே.லெட்சுமிநாராயணன் தொழில் முனைவு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்தும் பேசினார். மேலும் ஆர். லெட்சுமிநாராயணன் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றியும், எம்.ராஜு பணி வாழ்க்கை குறித்தும், சக்திகாணல் சிவக்குமார் பிரதமரால் விவரிக்கப்படும் பஞ்சபிரான் பற்றியும் பேசினாா். முடிவில் நேரு யுவ கேந்திரா திட்ட உதவியாளர் ஆர்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். .நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்