மாவட்ட அளவிலான தடகளப் போட்டி
கரூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.
கரூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கரூர் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர் நகுல் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், தாஸ் 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 2-வது இடமும், சுரேந்தர் 200 மற்றும் 400 மீட்டர் முதலிடம், 600 மீட்டர் ஓட்டத்தில் 3-ம் இடமும், நகுல், தாஸ், சக்திவேல், சுரேந்தர் 4×100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.
17 வயதிற்குட்பட்ட பிரிவில் தர்சன் 110மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், தரணீஸ் கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், 4×400 மீட்ட்டர் தொடர் ஓட்டத்தில் சாரதி, கோகுல், தர்சன், திருப்பதி ஆகியோர் 3-வது இடமும் பிடித்தனர்.19 வயதிற்குட்பட்ட பிரிவில் ப்ரியேஷ் 100மீ முதலிடம், 400மீ தடைதாண்டும் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் 2-வது இடமும், பூபதி நீளம் தாண்டுதலில் முதலிடம் மற்றும் 200மீட்டர் ஓட்டத்தில் 2-வது இடமும், யுகேஷ் கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், குணால் உயரம் தாண்டுதலில் 3-வது இடமும், பிரியேஷ், பூபதி, ஸ்ரீதர், ஸ்ரீயேஷ், ஸ்ரீநாத் ராவ், தரணீவாசன், பாரத் ஆகியோர் 4×100 மற்றும 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.
மாணவிகள் பிரிவில் ஸ்ரீவர்ஷா 600மீட்டர் ஓட்டத்தில் 2-வது இடமும் 400மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், ஸ்ரீவர்ஷா, நதியா, காவியா, கன்ஷிகா 4×100 தொடர் ஓட்டத்தில் முதலிடமும், 17வயதிற்குட்பட்ட பிரிவில் ரித்திகா கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், அபிஸ்ரீ, ரூவந்திகா, ஜினிதா, திவ்யதர்ஷினி 4×100மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 19வயதிற்குட்பட்ட பிரிவில் அனுஷ்கா கோலூன்றி தாண்டுதலில் இரண்டாமிடமும், நந்தனா மூன்றாமிடமும், நக்க்ஷத்ரா குண்டு எறிதலில் முதலிடம் மற்றும் வட்டு எறிதலில் 2-வது இடமும், நித்திலா 100மீ தடைதாண்டும் ஓட்டத்தில் 2-வது இடமும் பிடித்தனர். இதில் 15 மாணவர்கள், 8 மாணவிகள் என மொத்தம் 23 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர் மற்றும் ரஸிகா ஆகியோரை பள்ளியின் தாளாளர், அகரம் அறக்கட்டளை உறுப்பினர்கள், முதல்வர், துணைமுதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.