மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள்

மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடந்தன.

Update: 2022-11-01 19:52 GMT

பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கில், வாய்ப்பாட்டு இசை செவ்வியல், வாய்ப்பாட்டு இசை பாரம்பரிய நாட்டுப்புற வகை, கருவி இசை தாள வாத்தியம், கருவி இசை மெல்லிசை, நடனம் செவ்வியல், நடனம் பாரம்பரிய நாட்டுபுற வகை, காட்சிக்கலை இருபரிமாணம், காட்சிக்கலை முப்பரிமாணம், உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள் மற்றும் நாடகம், தனிநபர் நடிப்பு போன்ற கலைப் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், அண்ணாதுரை, சண்முகசுந்தரம், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர் என்று மாவட்ட திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்