திண்டுக்கல்: மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா - தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திண்டுக்கல் அருகே மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-08-04 08:51 GMT

கோபால்பட்டி,

திண்டுக்கல் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியை அடுத்த கே.ஆண்டியபட்டியில் மகாலட்சுமி அம்மன்,கருப்புசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது.

முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்பவனி, தண்ணீர் துறை நீராடல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்தது. தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

பின் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய ஆண்,பெண் பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு வரிசையாக உட்கார வைக்கப்பட்டார்கள்.

இதனையடுத்து பூசாரி கோவிந்தா கோஷம் முழங்க அவர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். இதனை காண கம்பிளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்