சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

மார்கழி மாத பிறப்பையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர். 4 மணி நேர காத்திருப்புக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2022-12-16 18:42 GMT

வத்திராயிருப்பு,

மார்கழி மாத பிறப்பையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர். 4 மணி நேர காத்திருப்புக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

மார்கழி மாத பிறப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இந்தநிலையில் நேற்று வானிலை காரணமாக பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்து இருந்தனர்.

சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை கேட்டின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

சிறப்பு பூஜை

அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வனத்துறை கேட் திறக்கப்பட்டது.

மார்கழி மாதம் பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்