ரூ.71 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

ரூ.71 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

Update: 2022-10-13 18:45 GMT

திருவாரூர் மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் அனைத்து ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் ரூ.71 லட்சம் மதிப்பிலான பணிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக தண்டலை ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கே.கே. நகர் தார்ச்சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கீழகாவாதுகுடி ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் 4 சாலை பணிகள், செருகுடி, பள்ளிவாரமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.26 லட்சம் மதிப்பில் 2 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகள் தரமாக நடைபெற்றுள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் தேவா, மாவட்ட ஊராட்சி செயலர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்