திருவையாத்துகுடி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்

திருவையாத்துகுடி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்

Update: 2023-01-23 19:49 GMT

திருவையாத்துகுடி ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய குழுவினர் ஆய்வு

அம்மாப்பேட்டை ஒன்றியம் திருவையாத்துகுடி ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய ஊரக வளர்ச்சி அதிகாரிகள் பாலமுரளி, ஜஸ்டீன் பிரதீஷ் ஆகியோர் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலாதர்மராஜ் தலைமையிலான கிராம மக்கள் மத்திய குழுவினரை வரவேற்றனர். முன்னதாக ஊராட்சி மன்றத்தில் பராமரித்து வரும் 1 முதல் 7 வரையிலான கணக்கு புத்தகங்கள், பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குறைகள் கேட்டார்

தொடர்ந்து திருவையாத்துகுடி ஊராட்சியில் நடந்து வரும் சாலைப்பணி, கட்டுமானப்பணி, தூர்வாரும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப்பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது அம்மாப்பேட்டை வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் அமானுல்லா, பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அதிகாரி ஜோதிபாண்டியன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் உதாரமங்கலம் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அவர்கள் நேரில் பார்வையிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி மற்றும் சென்னை, தஞ்சை வேளாண்துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளிட்ட வேளாண்மைதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்