பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2022-08-20 17:26 GMT

திருப்பனந்தாள்

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பனந்தாள் ஒன்றிய பா.ம.க. சார்பில் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

நிவாரணம் வழங்க வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்