பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவணா தலைமை தாங்கினார். திராவிட கழக மாவட்ட தலைவர் வீரபாண்டி முன்னிலை வகித்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் துரை.சம்பத் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களை தூண்டிவிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் பிரகாஷ், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழர் சமூகநீதி கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, கிறிஸ்தவ மக்கள் முன்னணி ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.