மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் திலீப்மேனன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மருந்து விற்பனை ஊழியர்களுக்கான சட்டப்பூர்வ பணி விதிகளை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நுழைவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சங்க மாநில செயலாளர் பிரதிப்மேனன், மாவட்ட செயலாளர் விஜயானந்த், மாநில செயற்குழு உறுப்பினர் சவுந்திரராமன், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.