அரியலூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமை தாங்கினார். பொறியாளர் அணி துணை செயலாளர் ராஜா பன்னீர்செல்வம், மாவட்ட கழக அவைத்தலைவர் வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கிட வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக அரசு உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிர்வாகம் விைள நிலங்களை அழித்து வருவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக நகர அவைத்தலைவர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்றார். முடிவில் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ரவி நன்றி கூறினார்.