தியாகதுருகம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்; கணவர் கைது
தியாகதுருகம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 45). கூலி தொழிலாளியான இவருக்கு கோகிலா (37) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் அசோக் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கோகிலா தனது கணவரிடம் கள்ளத்தொடர்பு பற்றி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அசோக் கோகிலாவை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோகிலா சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து, அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.