தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-05-22 19:10 GMT

சேதமடைந்த சாலை

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திக்கு உட்பட்ட செருப்பங்கோட்டில் இருந்து பேயன்குழி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சிரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேஷ், செருப்பங்கோடு.

அடையாள குறியீடு தேவை

நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் இருந்து கற்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கற்கோவிலின் பின்பகுதியில் விளையாட்டு திடல் அருகில் வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடை இருப்பதற்கான அடையாள குறிகள் வரைப்படாமல் காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வேகத்தடை மீது அடையாள குறிகள் வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், வடசேரி.

எரியாத மின்விளக்குகள்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 42-வது வார்டு இருளப்புரம் பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் எதிரே உள்ள 2 மின்கம்பங்கள் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்ரோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

நடவடிக்கை தேவை

தேருர் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.காலனி 14-வது தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் வாகனங்கள் ஏற்றுவதற்கான சாய்வு தளம் அமைத்து பெரிய கற்களை வைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-எஸ்.அய்யப்பன், தேருர்.

வேகத்தடை தேவை

கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் மீனாட்சிபுரம் அரசு பள்ளி உள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். ஆனால், பள்ளியின் அருகில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அதிவேகமாக வரும் வாகனங்களால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், மீனாட்சிபுரம்.

விபத்து அபாயம்

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் இருந்து மணியடிச்சான் கோவில் சந்திப்பு வரை உள்ள சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்பட்டு காணப்படுகிறது. தற்போது, பதிக்கப்பட்டுள்ள அலங்கார தரைக்கற்கள் சேதமடைந்து சாலை ஒரே சீராக இல்லாமல் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், கோட்டார்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

தாழக்குடி-பீமநகரி செல்லும் குறுக்கி சாலை உள்ளது. கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் அனுமதியின்றி இந்த சாலையில் அதிவேகமாக செல்கின்றன. இதனால், அந்த வழியாக ெசல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். மேலும், சாலையும் சேதமடைகிறது. எனவே, குறுகிய சாலையில் வரும் கனரக வாகனங்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சிதம்பரதாணு, தாழக்குடி.

----

Tags:    

மேலும் செய்திகள்