தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாலம் சரிசெய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இருந்து செங்கப்பட்டி செல்லும் சாலையில் பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் மேல் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பஸ்கள் செல்லும்போது தூக்கி அடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரபீக்ராஜா செங்கப்பட்டி
குடிநீர் தொட்டியை மூடி வைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மாங்காடு நெடுஞ்சாலை ஓரமாக காவிரி கூட்டு குடிநீர் தண்ணீர் தொட்டி எந்நேரமும் திறந்த நிலையில் உள்ளது. இதனால் தற்போது தொட்டியில் உள்ள தண்ணீர் பாசி படிந்த நிலையில் மாசடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மாங்காடு.
சேறும்-சகதியுமாக மாறிய மீன்மார்க்கெட்
புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமாக நகரின் மைய பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மீன்மார்க்கெட்டில் பொதுமக்கள் நடக்கும் பாதை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் மீன்மார்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் வழுக்கி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், பொதியக்கோண்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. தற்போது சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும்பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பொதியக்கோண்பட்டி.
குடிநீர் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா வெட்டன்விடுதி கள்ளர் தெருவில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சரியான குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தினமும் குடிநீர் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கறம்பக்குடி.