முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு

முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.

Update: 2022-09-28 18:51 GMT

கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான இளம் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு முடிவுற்றது. இதையடுத்து நேற்று முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.காம்., எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட மொத்தமுள்ள 12 பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி தலைமையில் தனித்தனியாக நடந்தது. இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்பட 4 பாடப்பிரிவுகளுக்கும் தலா 35 இடங்களும், எம்.காம்., (பி.காம்) பாடப்பிரிவுகளுக்கு 25 இடங்களும், எம்.காம். (பி.காம்.சி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கு 10 இடங்களும், கணிதத்திற்கு 35 இடங்களும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளுக்கு தலா 25 இடங்களும், கணினிபாடப்பிரிவுக்கு 42 இடங்களும் என மொத்தம் 377 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்