மூங்கில்குடி வேளாண் விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

மூங்கில்குடி வேளாண் விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

Update: 2023-06-09 18:45 GMT

மூங்கில்குடி வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 13-ந்தேதி பருத்தி ஏலம் நடக்கிறது என வேளாண் விற்பனை குழு மேற்பார்வையாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி பஞ்சு வெடித்து அறுவடையை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அறுவடை செய்யப்பட்ட பருத்திகளை கொள்முதல் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பெறுவதற்கு ஏதுவாக திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடியில் இயங்கி வரும் பூந்தோட்டம் வேளாண் விற்பனை குழு கூடத்தில் ஆண்டுதோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

பருத்தி ஏலம்

அதன்படி இந்த ஆண்டுக்கான பருத்தி ஏலம் வருகிற 13-ந்தேதி முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் அறுவடை செய்யும் பருத்திகளை வேளாண் விற்பனை கூடத்தில் விற்பனை செய்து அதிக லாபத்தை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்