பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2023-03-25 19:03 GMT

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது 2 மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும் வீட்டு தனிமையிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்