நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கியதால் சர்ச்சை - செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கியதால் ஏற்பட்ட சர்ச்சையில் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-05-27 05:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் கடந்த வருடம் அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குற பெண் ஒருவரை கோவில் நிர்வாகத்தினர் அவமானப்படுத்தி வெளியேற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தநிலையில் திருப்போரூர் தொகுதி எல்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி கடந்த 21-ந்தேதி அன்னதானம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது நரிக்குற பெண்கள் 3 பேர் உள்பட சிலரை கோவில் நிர்வாகத்தினர் தரையில் அமர வைத்து உணவு வழங்கினர், மற்றவர்கள் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

இதுபற்றி கோவில் நிர்வா கத்தினருடன், எந்தவித பாகுபாடும் காட்டாமல் அனைவரையும் நாற்காலியில் அமரவைத்து அன்னதானம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் எச்சரித்தார். இந்த சம்பவம் மறுபடியும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த செயலை கண்டிக்கும் வகையில் கோவில் பெண் செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணி, கோவில் சமையலர் குமாரி ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து அறிநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்