வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-02-25 18:30 GMT

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் கே.எம்.மகால் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எம்.என்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சங்கர், மாநில பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், கார்ல் மார்க்ஸ் சிந்தனையை பற்றி தமிழக கவர்னர் பேசியது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தும் நோக்கமுடையதாகும். இதுபோன்ற அபத்தமான பேச்சுகளை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடி பட்டா வழங்க வேண்டும். புதுக்கோட்டை நகராட்சியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் 141 பேருக்கு வியாபார வண்டி வழங்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து பகுதி பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும் வண்டி வழங்க வேண்டும். மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மணிமண்டபம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கி கட்டித்தர வேண்டும். காமராஜபுரம், பாலன் நகர், எம்.கே.நகர், தொண்டைமான் நகர், போஸ் நகர், நரிமேடு ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாக பட்டா வழங்க வேண்டும். இறையூர் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வரவேற்பதோடு, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காலதாமதம் நீடித்து வருவது கடும் அதிருப்தி நிலவுகிறது. குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும். இலவச பஸ் கிராமம் தோறும் முறைப்படி நிறுத்தி பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வருவதை மாவட்ட நிா்வாகமும், போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகர்மன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு திருமண மண்டபத்தை வந்தடைந்தது. முன்னதாக மாவட்ட துணை செயலாளர் சொர்ணகுமார் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்