தலைமை ஆசிரியர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை: ஆன்லைன் வாயிலாக நடந்தது
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.
அந்த வகையில் பொதுத்தேர்வு தொடங்குவதற்கு 3 மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில், தேர்வுக்கு மாணவ-மாணவிகளை தயார்ப்படுத்துவது எப்படி? அதற்கான கள நடவடிக்கைகளாக என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் 'ஜூம்' செயலியில் ஆன்லைன் வாயிலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.