2-ம் கட்ட கலந்தாய்வு 15-ந் தேதி தொடக்கம்

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு 15-ந் தேதி தொடங்கியது

Update: 2023-06-10 18:45 GMT

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட பொதுக்கலந்தாய்வு அனைத்து அறிவியல் பாட பிரிவுகளுக்கும் வருகிற 15-ந் தேதி, அனைத்து கலை பாடப் பிரிவுகளுக்கு 20-ந் தேதி காலை 9 மணிக்கு கல்லூரி உமையாள் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய 2 நகல்கள் ஆகிவற்றை நேரில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்