ரூ.98 லட்சத்தில் மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடக்கம்
மேலப்பாளையம் பகுதியில் ரூ.98 லட்சத்தில் மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.;
பேட்டை:
மேலப்பாளையம் மண்டலத்தில் 51, 52-வது வார்டு பகுதியில் ரூ.98 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. இதை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அப்துல் வகாப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.