பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணி

பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-12 18:45 GMT

பரமக்குடி

பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சாலை அமைக்கும் பணி

ராமநாதபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதையொட்டி பரமக்குடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை மதுரை நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ஜவகர் முத்துராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது சாலையின் தரம் குறித்தும் அளவு குறித்தும் சோதனை செய்தனர். சாலை அமைக்கும் பணியை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினர். பின்பு பல்வேறு பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகளையும் சாலை அமைப்பதற்கான மண் நிறத்தின் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அறிக்கை

இந்த ஆய்வு பணிக்கான அறிக்கையை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆய்வின் போது திட்டப்பணிகள் கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர் சாருமதி, உதவி பொறியாளர் அருண் பிரகாஷ், ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் சந்திரன், பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன், நெடுஞ்சாலை தர கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் வெற்றிவேல் ராஜன், உதவி பொறியாளர்கள் அன்பரசு, சதீஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்