காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்த காரிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழாவையொட்டி பாதயாத்திரை நடைபெற்றது. பாதயாத்திரைக்கு மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். மன்னார்குடி நகர தலைவர் கனகவேல், வட்டார தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் வடுகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாதயாத்திரை காரி கோட்டையில் இருந்து தொடங்கி மேலவாசல் நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை, உள்ளிக்கோட்டை வழியாக பரவக்கோட்டையை சென்றடைந்தது.