ராஜபாளையம்,
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேரை சந்தேகத்தின் ேபரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சங்கர் (வயது 30), ஆனந்தராஜ் (33) என்பதும், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களி டம் இருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் ைகது செய்தனர்.