புகார்பெட்டி

புகார்பெட்டி

Update: 2022-06-08 17:07 GMT

கழிவுகள் அகற்றப்பட்டது

பார்வதிபுரம் அனந்தனார் கால்வாயில் தூர்வாரப்பட்டு கழிவுகளை சிங்காரத்தோப்பு சானல்கரை சாலையோரத்தில் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் காணப்பட்டது. இதனால், அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தன்கடை இளையாம்பாறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோல்வின், புத்தன்கடை.

பாசிகள் நிறைந்த தெப்பக்குளம்

ராஜாக்கமங்கலத்தில் பழமையான பூதநாதசிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தெப்பக்குளம் தூர்வாராமல் உள்ளதால் தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் இறங்கி குளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் படித்துறைகள் உடைந்து முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. எனவே தெப்பக்குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

சாலை சீரமைக்கப்படுமா?

கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊற்றுக்குழி சந்திப்பில் இருந்து நெடியான்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஊற்றுக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் 100 அடி தூரத்துக்கு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஸ் சந்திரபோஸ், ஊற்றுக்குழி.

நடவடிக்கை தேவை

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெக்குறிச்சி நீண்டகரையில் காமராஜர் 2-வது தெரு உள்ளது. இந்த தெருவின் முடிவில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், அங்கு துர்நாற்றம வீசி வருகிறது. எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கு.சிவகரன், தெக்குறிச்சி.

சீராக குடிநீர் வினியோகிக்கப்படுமா?

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கரியமாணிக்கபுரம் உள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்