நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன் சாதனை
நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன் சாதனை படைத்தனர்.
காரைக்குடி
சிவகங்கை அண்ணா விளையாட்டு அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றன.போட்டிகளில் 16-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் பாலமுருகன் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்றுள்ளார்.இவர் 6.95 மீட்டர் நீளம் தாண்டி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான போட்டியில் சிவகங்கை மாவட்டம் சார்பாக விளையாடும் தகுதியை பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் முந்தைய சாதனையான 6.50 மீட்டரை முறியடித்து புதிய சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவரை வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் மற்றும் முதல்வர் சுவாமிநாதன், பொருளாளர் ராஜி முகம்மது மீரா ஆகியோர் பாராட்டினர்.