இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு

மணக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடந்தது.

Update: 2022-07-10 17:18 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் வீராசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகக்குழுவை சேர்ந்த செல்வராஜ் வரவேற்றார்.கிளை செயலாளர் மங்கை முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். இதில் தலைஞாயிறு ஒன்றிய செயலாளரர் சந்தானகிருஷ்ணன், துணை செயலாளர் முருகதாஸ்,மாவட்ட துணை செயலாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைஞாயிறில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. எனவே மாணவர்கள் நலம் கருதி கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் கவாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்