கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உடல் நசுங்கி சாவு

திருவிடைமருதூர் அருகே தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். அவரது உடல் 2 மணி நேர தீவிர முயற்சிக்கு பின் மீட்கப்பட்டது.

Update: 2023-02-18 20:22 GMT

திருவிடைமருதூர்;

திருவிடைமருதூர் அருகே தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். அவரது உடல் 2 மணி நேர தீவிர முயற்சிக்கு பின் மீட்கப்பட்டது.

கல்லூாி மாணவர்

கும்பகோணம் அருகே உள்ள மகாராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகையன். இவருடைய மகன் சண்முகம்(வயது20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தாா். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர் விடுமுறை நாளில் கட்டிடப் பணிகளுக்கு சென்று வருவது வழக்கம்.பழியஞ்சியநல்லூர் கீர்த்திமானாறு அருகில் மேல அகலங்கன் வாய்க்கால் சிமெண்ட் தடுப்பு சுவர் கட்டும்பணியின் போது சண்முகம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கனரக வாகனமான கான்கிரீட் கலவை எந்திரம் கான்கிரீட் கொட்ட வரும்போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் கட்டிட பணி செய்து கொண்டிருந்த இடத்தில் கவிழ்ந்தது.

பரிதாப சாவு

இதில் எந்திரத்துக்கு இடையில் சிக்கிய சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 2 கிரேன்கள், ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி கவிழ்ந்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சண்முகத்தின் உடலை மீட்டனர். சண்முகம் உடல்கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விடுமுறை நாளில் வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவ நினைத்த கல்லூரி மாணவரின் பரிதாப சாவு அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்