திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறந்த டாக்டர்களுக்கு கலெக்டர் விருது
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.;
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் சிறந்த மருத்துவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், மருத்துவ இயக்குனர் டி.ஆர்.திலீபன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறந்த மருத்துவர்களை பாராட்டி விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், மருத்துவக்கல்லூரி டீன் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.