கடலூா் மாவட்டத்தில் 15-ந்தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் கலெக்டர் உத்தரவு

கடலூா் மாவட்டத்தில் 15-ந்தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளாா்.

Update: 2023-08-11 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களை மூடவேண்டும். இதை மீறி அரசு மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலும், அரசு பார்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 பார்களில் மதுபானங்கள் விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்